முதல் பக்கம் » பெண்கள் » சமையல் » தானிய காய்கறி சாம்பார்

South Indian Food - Cereals Sambar

-

தானிய காய்கறி சாம்பார்

சமையல்:தானிய காய்கறி சாம்பார்

கூடல் - Monday, August 16, 2010
South Indian Food - Cereals Sambar - Cooking Recipes in Tamil

நம் முன்னோர்கள் ஆரோக்கியமாகவே வாழ்ந்தார்கள். ஆரோக்கியமாகவே வாழ கற்றுக் கொடுத்தார்கள். ஆனால் நாம், இன்றைய சூழலில் ஆரோக்கியம் என்பதை விட்டு விட்டு கண்களுக்கு அழகானதையே சமைத்து உண்கிறோம். உங்கள் ஆரோக்கியத்தை பேணி காக்க இதோ, சுவையான சத்தான தானிய காய்கறி சாம்பார்.

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு - 1/2 கப்
விருப்பப்பட்ட தானிய கலவை (ஊற வைத்தது) - 1/4 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
நறுக்கிய காய்கறி கலவை - 1 கப்
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுந்து - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* ஊற வைத்த தானியங்களுடன் துவரம்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.

* வெந்ததும், அதில் நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, தேவையான தண்­ர் சேர்த்து நன்றாக வேக விடவும்.

* காய்கறிகள் வெந்ததும் புளியை அரை கப் தண்ணீ­ரில் கரைத்து வடிகட்டி ஊற்றவும்.

* அதில் பெருங்காயம், உப்பு சேர்த்து கொதித்ததும், தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்துக் கொட்டவும்.

* கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

* (குறிப்பு: இந்த சாம்பாரில் அதிக அளவு புரதச்சத்து இருக்கிறது. தானிய வகைகளை தோலுடன் சேர்ப்பதால் நார்ச்சத்தும் கிடைத்து விடும். எண்ணெய் அதிகம் சேர்க்காத அருமையான சாம்பார் இது.)

சமையல்

Site Meter