வெள்ளிக்கிழமை அக்டோபர், 9, 2015 - Friday, October 09, 2015

Movie Review  

I - Tamil Movie Review
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்துள்ள படம் ஐ. பட்ஜெட் பெருசு, கதை சிறுசு....
மேலும் (more)  
Snehavin Kadhalargal - Tamil Movie Review
வெறும் அறுபது லட்சத்தை வைத்துக் கொண்டு லட்சியப் கதையை தர முயற்சித்திருக்கிறார் முத்துராமலிங்கன். முதல் முயற்சி. வரவேற்போம்!...
மேலும் (more)  
Aintham Thalaimurai Siddha Vaidhiya Sigamani - Tamil Movie Review
கோர்வையான திரைக்கதை மூலம் நடத்திச் சென்றிருந்தால், சபாஷ்மணி ஆகியிருப்பான், சிகாமணி....
மேலும் (more)  
Thirumanam Ennum Nikkah - Tamil Movie Review
ரயில் பயணத்தின்போது ஏற்படும் காதல் கதை....
மேலும் (more)  

 அன்புடைமை

திருக்குறள் - Thirukkural

  
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்.
- (குறள் : 71)

அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பைப்) பலரும் அறிய வெளிப்படுத்தி விடும்.


வரலாற்றில் இன்று

Today in History  

அக்டோபர்
9
 • 1003 - லெயிஃப் எரிக்சன் கனடாவில் லான்ஸ் ஒக்ஸ் மெடோஸ் என்ற இடத்தில் தரையிறங்கி, அமெரிக்காவில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.
 • 1604 - சுப்பர்நோவா 1604 பால் வெளியில் கண்டுபிடிக்கப்பட்டது.
 • 1804 - டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது.
 • 1820 - கயாக்கில் ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
 • 1871 - மூன்று நாட்களுக்கு முன்னர் சிக்காகோவில் பரவிய பெரும் தீ அணைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
 • 1875 - கால்பந்து போட்டி ஒன்று இங்கிலாந்தின் ஹாம்ப்டன் பார்க்கில் நடைபெற்றது. உலகிலேயே முதன் முதலில் நடைபெற்ற கால்பந்து இது என்று நம்பப்படுகிறது.
 • 1888 - வாஷிங்டன் நினைவுச் சின்னம், அக்காலத்தில் உலகின் உயரமான கட்டிடம், வாஷிங்டன் டிசியில் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது.
 • 1910 - மாறுவேடத்தில் உலகப் பயணம் மேற்கொண்ட பின்னர் வ. வே. சு. ஐயர் புதுச்சேரி திரும்பினார்.
 • 1914 - முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் ஆண்ட்வேர்ப் நகரம் ஜெர்மனியிடம் வீழ்ந்தது.
 • 1940 - லண்டனிலுள்ள St. Paul தேவாலயத்தைக் குண்டுவைத்துத் தாக்கினர் நாஜிப் படையினர். தேவாலயத்தின் மாடம் எந்தச் சிதைவும் இல்லாமல் தப்பியது
 • 1941 - பனாமாவில் இடம்பெற்ற புரட்சியின் பின்னர் ரிக்கார்டோ டெ லா கார்டியா அதிபரானார்.
 • 1962 - உகாண்டா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
 • 1970 - கம்போடியாவில் கெமர் குடியரசு அறிவிக்கப்பட்டது.
 • 1975 - அமைதிக்கான நோபல் பரிசு ரஷ்யாவின் Andrei Sakharov-க்கு வழங்கப்பட்டது ஹைட்ரஜன் குண்டின் தந்தை என்று அவர் வருணிக்கப்படுகிறார்.
 • 1981 - பிரான்சில் மரணதண்டனை நிறுத்தப்பட்டது.
 • 1983 - ரங்கூனில் தென் கொரிய அதிபர் சுன் டூ-ஹுவான் மீது இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் அவர் உயிர் தப்பினார். நான்கு அமைச்சர்கள் உட்பட பலர் உயிரிழந்தனர்.
 • 1987 - யாழ்ப்பாணத்தில் நிதர்சனம் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் முரசொலி நாளிதழ் கட்டிடங்களை இந்திய இராணுவத்தினர் தகர்த்தனர்.
 • 1989 - ரஷ்யாவின் வரோனியொஷ் அருகில் ஒரு பறக்கும் தட்டு இறங்கியதாக சோவியத் ஒன்றிய செய்தித் தாபனம் அறிவித்தது.
 • 2001 - இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.
 • 2004 - ஆப்கானிஸ்தானில் முதற்தடவையாக சனநாயகத் தேர்தல் இடம்பெற்றது.
 • 2006 - வட கொரியா தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியது.
Site Meter